• முகப்புப் பக்கம்>
  • இந்துவேதம்>
  • பத்தி 01 முதல் 03
  • பத்தி 01 முதல் 03

    இந்து வேதம்

    (ஒரு சுருக்க விளக்கம்)

    பத்தி 1

     இந்து வேதம் என்ற பொருளாழம் மிக்க ஒர் அழகிய இனிய செந்தமிழ்ச் சொல், இம்மண்ணுலகில் இந்து என்ற சொல்லுக்கு ஆரம்ப காலத்திலேயே 48 முதல் 108 சொற்களில் நேரடியான பொருள் விளக்கம் தரப் பட்டிருக்கின்றது. கடந்த நான்கு யுகங்களில், இந்த இந்து என்ற ஒரே சொல்லுக்கு நேரடிப் பொருள் கூறும் சொற்களாக ஆயிரக்கணக்கான சொற்கள் தோற்றுவிக்கப் பட்டிருக்கின்றன அல்லது அறிவிக்கப் பட்டிருக்கின்றன.

    பத்தி 2

    இந்த இந்து வேதம் இந்த மண்ணுலகம் தோன்றுவதற்கு முன்னரே கணக்கற்ற கோடிகோடி ஆண்டுகளாக அண்டங்கள் பேரண்டங்கள் அண்ட பேரண்டங்கள் எனும் அனைத்திலும் நன்கு பரவி, வேரூன்றி வளர்த்து வளப்பட்டு வலிமைப்பட்டு பொலிவு பெற்ற ஒன்றாகும்.

    பத்தி 3

    இந்த இந்து வேதம் அண்ட பேரண்டங்களை ஆளுகின்ற மூலப் பதினெண் சித்தர்கள், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புகள், 48 வகைப்பட்ட கடவுள்கள், 48 வகை வழிபடு நிலையினர்கள், 48 வகைச் சித்தர்கள் முதலியவர்களால் காலங்கள் தோறும் ஏற்படக் கூடிய புதிய புதிய தேவைகளுக்கேற்பத் தேவையான மாற்றங்களை யெல்லாம் செய்யப் பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.

    எனவேதான், அண்டங்கள் பேரண்டங்கள், அண்டபேரண்டங்கள் என்பனவற்றிலுள்ள எல்லா வகைப்பட்ட உலங்களிலும், இந்த இந்து வேத மதமான இந்து மதம் ஒன்றே நிலையாக இருந்து வருகின்றது.

    ஆனால் அவ்வப்பொழுது அந்தந்த உலகங்களின் சூழ்நிலை மாற்றங்களுக்கேற்ப துணை மதங்கள் சில இந்த இந்து வேத மதமான இந்து மதமெனும் ஆலமரத்தின் புதிய புதிய இலைகளாகவும் கிளைகளாகவும் விழுதுகளாகவும் தோன்றுவதுண்டு, ஆனால் மிகவிரைவில் அவைகளனைத்தும், தாங்கள் இந்து மதத்தின் ஒர் அங்கம்தான் என்பதை உணர்ந்து இந்துமதத்தோடு ஐக்கியமாகி விடுகின்றன. அதாவது இந்துவேத மதமான இந்துமதம் தவிர வேறு எந்த ஒரு புதிய மதம் தோன்றினாலும், அது குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் தனிப்பட்ட ஒரு மதமாகத் தனித்து இயங்காமல் இந்துவேத மதமான இந்து மதத்தோடேயே இணைந்து விடும் என்பதுதான் அருளுலக வரலாறு.


    தொடர்புடையவை: