முகப்புப் பக்கம்>
சூலகங்கள்
சூலகங்கள்
இந்து வேத சூலகங்கள்
இந்துவேதம்; இருக்கு வேதம், அசுரவேதம், அதர்வான வேதம், யாமவேதம் என்று நான்கு வகைப்படும். இவை ஒவ்வொன்றிலும் 1,10,592 கருத்துக்கள் எண்ணிக்கையிடப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றன.
- இருக்கு வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும், ‘இருக்கு வேத உரைக்கோவை வாசகம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
- அசுர வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும் ‘அசுரவேத வாக்கு’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
- அதர்வான வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும் ‘அதர்வான வேத வாக்கியம்’ எனப் பெயரிடப் பட்டிருக்கிறது.
- யாம வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும் ‘யாம வேத வாசகம்’ எனப் பெயரிடப் பட்டிருக்கிறது.
இந்த நான்கு வேதங்களிலும், ஒவ்வொரு வேதத்திலும் காண்டங்கள் என்ற பெயரில் நாற்பத்தெட்டுப் பிரிவுகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. இதில் ஒவ்வொரு காண்டமும், மண்டலம் என்ற பெயரில் நாற்பத்தெட்டு பிரிவுகளாக வகுக்கப் பட்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு மண்டலத்திலும் நாற்பத்தெட்டு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன.
இவை முறையே,
- இருக்குவேத நாள் உரைக்கோவை வாசகம்,
- அசுரவேத நாள் வாக்கு,
- அதர்வான வேத நாள் வாக்கியம்,
- யாம வேத நாள் வாசகம்
என்று பெயரிடப் பட்டுள்ளன. இந்தப் பகுப்புமுறை பதினெண்சித்தர்கள் எதையும் எண்ணிக்கையிட்டு நறுக்குத் தெரித்தாற்போல சுருக்கமான சொற்றொடர்களில் அழகுறக் கூறும் பாங்குடையவர்கள் என்பதை விளக்குகிறது.
இந்த நான்கு வேதங்களிலும் உள்ள உரைக்கோவை வாசகங்கள், வாக்குகள், வாக்கியங்கள், வாசகங்கள் அனைத்திலும் ‘கருவாக உள்ள’ அதாவது, ‘சூல்’ ஆக உள்ள (சூல் = கரு) மையக் கருத்துக்கள் ஒரு வரி முதல் பல வரிகள் வரை உள்ள சுருக்கமான வாசகங்கள் சூலகம் (சுலோகம்) என்ற பெயரில் எளிதில் மனப்பாடம் செய்து மனதில் நிலை நிறுத்திக் கொள்ளும் வண்ணம் 4,42,368 (நான்கு இலட்சத்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபத்தெட்டு) தனித்தனி கருத்துக்களாக, கருத்துச் சொற்றொடர்களாக எழுதப்பட்டிருக்கின்றன. இந்தச் ‘சூலகம்’ என்ற சொல்லே, நாளடைவில் பேச்சு வழக்கில் ‘சுலோகம்’ என்றாயிற்று.
அசுர வேத சூலகங்கள் (இந்துவேத நாயகம் அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார் அவர்கள் அருளியவை.)
இந்து வேதக் கருத்துக்களும் செய்திகளும் அசுர வேதத்தில் (1,10,592) ஒரு இலட்சத்து பத்தாயிரத்து ஐநூற்று தொண்ணூற்றிரண்டு வாக்குகளாக இருக்கின்றன.
காண்டங்கள் 48;
ஒவ்வொரு காண்டத்திலும் மண்டலங்கள் 48;
ஒவ்வொரு மண்டலத்திலும் வாக்குகள் 48.
ஆக மொத்தம் 1,10,592 வாக்குகள் உள்ளன. அவற்றுள் சிலவே இங்கே வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க...
அதர்வான வேத சூலகங்கள் (இந்துவேத நாயகம் அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார் அவர்கள் அருளியவை.)
இந்து வேதக் கருத்துக்களும் செய்திகளும் அதர்வான வேதத்தில் (1,10,592) ஒரு இலட்சத்து பத்தாயிரத்து ஐநூற்று தொண்ணூற்றிரண்டு வாக்கியங்களாக இருக்கின்றன.
காண்டங்கள் 48;
ஒவ்வொரு காண்டத்திலும் மண்டலங்கள் 48;
ஒவ்வொரு மண்டலத்திலும் வாக்கியங்கள் 48.
ஆக மொத்தம் 1,10,592 வாக்கியங்கள் உள்ளன. அவற்றுள் சிலவே இங்கே வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க...
இருக்கு வேத சூலகங்கள் (இந்துவேத நாயகம் அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார் அவர்கள் அருளியவை.)
இந்து வேதக் கருத்துக்களும் செய்திகளும் இருக்கு வேதத்தில் (1,10,592) ஒரு இலட்சத்து பத்தாயிரத்து ஐநூற்று தொண்ணூற்றிரண்டு உரைக்கோவை வாசகங்களாக இருக்கின்றன.
காண்டங்கள் 48;
ஒவ்வொரு காண்டத்திலும் மண்டலங்கள் 48;
ஒவ்வொரு மண்டலத்திலும் உரைக்கோவை வாசகங்கள் 48.
ஆக மொத்தம் 1,10,592 வாசகங்கள் உள்ளன. அவற்றுள் சிலவே இங்கே வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க...
யாம வேத சூலகங்கள் (இந்துவேத நாயகம் அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார் அவர்கள் அருளியவை.)
இந்து வேதக் கருத்துக்களும் செய்திகளும் சாம வேதத்தில் (யாம வேதத்தில்) 1,10,592 ஒரு இலட்சத்து பத்தாயிரத்து ஐநூற்று தொண்ணூற்றிரண்டு வாசகங்களாக இருக்கின்றன.
காண்டங்கள் 48;
ஒவ்வொரு காண்டத்திலும் மண்டலங்கள் 48;
ஒவ்வொரு மண்டலத்திலும் உரைக்கோவை வாசகங்கள் 48.
ஆக மொத்தம் 1,10,592 வாசகங்கள் உள்ளன. அவற்றுள் சிலவே இங்கே வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க...