இந்த இந்து வேதம் கணக்கற்ற கோடி கோடி ஆண்டுகளாக அண்ட பேரண்டங்களில் வாழ்ந்து வருகின்ற ஒன்றாகும்.
எனவேதான் இந்த இந்து வேதம் 1,2,3, . . என்ற எண்களையும், எண்களின் வடிவங்களையும், எண்களின் வரிசை முறைகளையும்; கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எனும் நான்கு வகைப்பட்ட (சித்தர்கள் எதையும் நான்கு என்று பிரிக்கும் பழக்கப்படியே கணக்கியலிலும் பகுத்துள்ளார்கள் என்பது இங்கு எண்ணிப் பார்க்கத் தக்கது) கணக்கியல்களையும் மிகமிகத் தெளிவாகவும், வரையறுக்கப்பட்ட உண்மைகளாகவும் பெற்றிருக்கிறது.
இதுவே இந்துவேதம் மிகப் பன்னெடுங் காலமாக பகுத்தறிவுப் போக்கில், அறிவு விழித்த நிலையில் வளர்க்கப் பட்டு வந்திருக்கிறது. அல்லது வளர்ந்திருந்திருக்கிறது என்பதற்குச் சான்றாகும்.
இதைத்தான், இந்துமதத்தை முதன் முதல் அரசாங்கப் பூர்வமாக இம்மண்ணுலகுக்கு அறிவித்த ஆதிசிவனார்; இந்து வேதம் மனித வாழ்வுக்கு அடிப்படையான (1) எண்ணையும், எண் சார்ந்த கணக்கியலையும்; (2) எழுத்தையும், எழுத்து சார்ந்த இலக்கிய இயலையும் இரு கண்ணென வழங்கியதால்தான் விலங்குகளோடு விலங்குகளாக வாழந்த மணீசர்கள் மென்மையும், நுண்மையும், ஒண்மையும், திண்மையும், பாண்மையும் ஊற்றெடுக்கும் மனதையுடைய மனிதர்களானார்கள்.
அதனால்தான்,
அதாவது மனிதனுக்கு முதலில் மொழியறிவு தேவை, பிறகு மத அறிவு தேவை என்பதுதான் பதினெண் சித்தர்களுடைய முடிவான கருத்தாகும்.
இக்கருத்தே, இந்து வேதத்தில் கொள்கை அளவிலும், இந்துமதத்தில் செயல் வடிவிலும் நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.
இதைத்தான் அண்ட பேரண்டமாளும் இந்துவேதமும் இந்து வேதத்தின் செயல் வடிவான இந்து மதமும்,
என்று பலவாறு முத்தமிழ்ச் சங்கம் துவக்கப்பட்ட பொழுது யாம் கூறியதை எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இப்படி யாம் கூறுவதற்குக் காரணம் இம்மணணுலகின் அருளுலகை நிறுவிய மூலப் பதினெண் சித்தர்களும், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புக்களும் ஆதிசினாராகிய யாமே தென் இமய மலையின் தென் கங்கை ஆறும், தென் யமுனை ஆறும், தென் இந்து ஆறும் உருவாக்கும் முக்கோணத் தீவில் மோகஞ்சிதறா நகரில் அனாதி காலந் தொட்டு இருந்தும் வரும் முத்தமிழ்ச் சங்கத்தையும் அதனருகிலுள்ள அருட்பா நகரில் உள்ள பதினெண் சித்தர் மடம், பீடம் முதலியவற்றையும் பஃறுளியாற்றங் கரையிலுள்ள தொன்மதுரைக்குக் கொண்டு வந்தோம்.
எனவேதான், தமிழ் மொழியின் அருமை, பெருமை, கடவுள் தன்மை, அருளாற்றல் முதலிய முதன்மையான செய்திகள் பலவற்றையும் முத்தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட விழாவிலேயே அறிவித்து விட்டோம்.
இப்பொழுது பதினெண்சித்தர் மடம், பீடம் துவக்கப்படும் இந்த விழாவில் இந்து வேதத்திற்கும், இந்து மதத்திற்கும், அருளுலகுக்கும், கடவுளர் உலகத்திற்கும், உயிர் மூச்சாக இருக்கின்ற அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி பற்றிய பேருண்மைகள் பலவற்றையும் வெளியிடுகிறோம்…
என்று ஆதிசிவனார் தமது குருபாரம்பரியத்தில் குறிப்பிடுகிறார் – என்றிப்படி பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் இந்துவேதம் பற்றியும்; இந்து மதம் பற்றியும் எழுதப் புகுந்த தமது, இலக்கியங்களில் அல்லது தமது படைப்புக்களில் எல்லாம் இந்து மதத்தைக் தோற்றுவித்த பதினெண் சித்தர் மடத்தின் முதல் மடாதிபதியாகவும், பீடாதிபதியாகவும், இம்மண்ணுலகின் முதல் அரசான பாண்டிய அரசின் முதல் அரசனாகவும் செயல்பட்டிட்ட ஆதிசிவனாரின் வாசகங்கள் எல்லாம் அப்படி அப்படியே எடுத்து எழுதுகிறார்.
இப்படி இவர் எழுதப் புகுந்ததற்குக் காரணம் இந்தக் கலியுகமாகிய நான்காவது யுகத்தில் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகிய இவர்தான் இக்கலியுகத்தில் தோன்றிய முதல் பதினெண் சித்தர் பீடாதிபதியாவார்.
அதாவது கலியுகத்தில் பதினெண் சித்தர்களுடைய சித்தர் நெறியெனும் சீவ நெறியான மெய்யான இந்துமதம் மிகுதியாக நலிந்தும், மெலிந்தும், சிதைத்தும், சீரழிந்தும், உருக் குலைந்து செல்வாக்கிழந்து போய்விட்ட காரணத்தினால்தான் மூலப்பதினெண் சித்தர் பீடாதிபதிகளால் இந்தப் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி தோற்றுவிக்கப் பட்டார்.
அதாவது, இந்துமதம் செல்வாக்கிழக்கும் பொழுதெல்லாம் மூலப் பதினெண் சித்தர்கள் பதினெண் சித்தர் பீடாபதிபதிகளைத் தோற்றுவிப்பார்கள் என்பதே இந்து மதத்தின் மரபு.
பின்குறிப்பு: (இந்த நகரின் நினைவாகத்தான் கடல்கோள்களால் தென் இமயமலையும் மேற்படி ஆறுகளும் அழிந்த பிறகு தோன்றிய வடஇமய மலையில் தோன்றிய ஆறுகளும் வடகங்கை வடயமுனை வடஇந்து (சிந்து) வடப் பிறம்ம புத்திறம் , , . முதலிய ஆறுகளின் இடங்களில் இதே பெயரை உடைய அதாவது மோகஞ் சிதறா என்ற பெயரை உடைய நகரங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் இன்றைக்கு சிந்து என்று சொல்லப்படும் வடஇந்து ஆற்றங்கரையில்தான் புதையுண்ட மொகஞ்சோதாரோ எனப்படும் மோகஞ் சிதறா நகரம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. மற்ற மூன்று ஆற்றங்கரை களிலிருந்து நகரங்கள் இன்றும் கண்டுபிடிக்கப் படவில்லை. இதைப் போலத்தான் இந்த மோகஞ் சிதறா நகருக்கு அருகில் பதினெண் சித்தர் மடமும் பீடமும் தோற்றுவிக்கப்பட்ட அருட்பா நகர் இருந்திட்டது. இப்போது புதைபொருள் ஆராய்ச்சியால் வடசிந்து ஆற்றங்கரையிலேயே மொகஞ்சதாரோ நகரையொட்டியே அரப்பா நகராகக் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. அதாவது பதிணென் சித்தர்களும், பதினெண்சித்தர் பீடாதிபதிகளும் இந்த உலகில் முதன் முதல் தோன்றிய மிகப் பெரிய நிலப்பரப்பான இனமுறியாக் கண்டம் மூன்று கடல்கோள்களால் கடலுக்குள் ஆழ்ந்து அழிந்த போதிலும் அவற்றின் நினைவாகவே அக்கண்டத்திலிருந்த மலைகள், ஆறுகள், காடுகள்.. . முதலியவற்றின் தூய செந்தமிழ்ப் பெயர்களையே புதிதாகத் தோனறிய வட இமயமலை முதல், வடவேங்கடம் வரையுள்ள நிலப்பரப்பிலுள்ள மலைகளுக்கும், ஆறுகளுக்கும், காடுகளுக்கும் பெயரிட்டார்கள்)