இருக்கு வேதம் காண்டம்; 1, மண்டலம்: 9, நாள் உரைக்கோவை வாசகம் 24:
“அனாதிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ‘மணுநீதி’ எனும் பதினெட்டு வகைப்பட்ட நூல்களால்; மணீசர்களுக்கிடையில் பிறப்பால் உடல் வண்ணத்தில் ஏற்பட்டிருந்த நாற்பத்தெட்டு (48) வகையான நிறவேறுபாடுகளாலும்; உடலுறுப்புக்களின் வேறுபாடுகளாலும் ஏற்பட்டிருந்த எண்ணூறுக்கும் (800) மேற்பட்ட இனப்பிரிவினர்களும்; பரந்துபட்ட இளமுறியாக் கண்டமெனும் குமரிக்கண்டத்தின் ஏழாயிரம் கல் தொலைவு எல்லைக்குள் ஆங்காங்கே இருந்த மக்கள் உருவாக்கிக் கொண்டிட்ட எண்ணூறுக்கும் (800) மேற்பட்ட மொழிப்பிரிவினர்களுக்கும்; மணீசர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொண்டு வாழ்ந்திட்ட ‘நாடு’ எனும் வாழிடங்களால் ஏற்பட்டிருந்த எண்ணூறுக்கும் மேற்பட்ட பிரிவினர்களும்; … தங்கள் தங்களுடைய கூட்டத்தவர்களுக்கிடையில் தோன்றிய அருளாளர்கள் உருவாக்கிய ‘வேதங்களின்’ பெயர்களாலும், ‘வேத மதங்களின்’ பெயர்களாலும்; இவற்றிற்குரிய ‘கடவுள்களின்’ பெயர்களாலும் … தொடர்ந்து சண்டை சச்சரவுகளையும், மதமாற்றப் போராட்டங்களையும், மத ஆக்கிரமிப்புப் போர்களையும் வளர்த்துக் கொண்டே போனார்கள்! வளர்த்துக் கொண்டே போனார்கள்!! வளர்த்துக் கொண்டே போனார்கள்!!! …..
எனவே! எனவே!! எனவே!!! … அண்டபேரண்டமாளும் மூலப்பதினெண்சித்தர்களும், மூலப்பதினெட்டாம்படிக் கருப்புகளும்; இம்மண்ணுலகத்தாரின் நல்வாழ்வுக்காக, பண்படாத மணீசர்களைப் பண்பட்ட மனிதர்களாக்குதற்காக; உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்காக, உலகச் சமாதானம், சமத்துவம், சகோதரத் தத்துவம், ஒற்றுமை, மானுட அன்பு, பற்று, பாசம், தோழமை, நட்பு, ஈவு, இரக்கம், அரவணைப்பு, கூடிவாழல், மொழிவிடுதலை, இனவிடுதலை, நாட்டுவிடுதலை, தனிமனித விடுதலை, குடும்பவிடுதலை, சமுதாயவிடுதலை, அரசியல்விடுதலை… முதலிய குறிக்கோள்களை உடைய அறிவியல்பூர்வமான அணுகுமுறைகளைப் பெற்ற ‘இந்துவேதத்தை’ இவ்வுலகப் பொதுவேதமாக; இவ்வுலகின் மூலவேதமாக, இவ்வுலகின் முழுமை பெற்ற வேதமாக; … அருளினர்.