• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-01:09:23
  • இருக்கு வேதம்-01:09:23

    01:09:23

    இருக்கு வேதம் காண்டம்; 1, மண்டலம்: 9, நாள் உரைக்கோவை வாசகம் 23:

    “1. விண்வெளியில் அண்டபேரண்டங்களிலிருந்து இம்மண்ணுலகுக்கு வந்திட்ட அருளுலகத்தவர்கள் ‘திருக்கல்’கள் எனப்பட்டனர். இம்மண்ணுலகின் நிலப்பரப்புக்களிலிருந்து வெளிப்பட்ட அருளணுக்களின் சேர்க்கையால் உருவான அருளுலகத்தவர்களும் ‘திருக்கல்’கள் எனப்பட்டார்கள். 2. இதேபோல், இம்மண்ணுலகில் தோன்றிய பயிரினங்களிலிருந்து வெளிப்பட்ட அருளணுக்களின் சேர்க்கையால் உருவான அருளுலகத்தவர்கள் ‘தருக்கல்’கள் எனப்பட்டார்கள். 3. இதேபோல், உயிரினங்களிலிருந்து வெளிப்பட்ட அருளணுக்களின் சேர்க்கையால் உருவாக அருளுலகத்தவர்கள் ‘கருக்கல்’கள் எனப்பட்டார்கள். 4. இதேபோல் சித்தர்களால், அருளணுக்கள் எதேனும் பொருள்களுக்குள்ளேயோ, அல்லது பயிரினங்களுக்குள்ளேயோ, அல்லது உயிரினங்களுக்குள்ளேயோ, அல்லது மண்ணுலகின் ஈசர்களான ‘மணீசர்களுக்குள்ளேயோ தேவையான அளவுகளில் ஒன்றுதிரட்டிச் சேர்க்கப்பட்டு உருவாக்கப்படும் அருளுலகத்தவர்கள் ‘குருக்கல்’கள் எனப்பட்டார்கள். இப்படி உருவான நான்கு வகைப்பட்ட அருளுலகத்தவர்களையும் பூசை செய்து போற்றிப் பேணிப் பயனடையும் வழிகளைக் கூறும் வேதங்களின் பெயர்களாலும்; அருளுலக வாழ்வுக்குரிய பழக்கவழக்க நடைமுறைகளை அறிவிக்கும் மதங்களின் பெயர்களாலும் விளைய வேண்டிய ஒற்றுமை, பற்று, பாசம், தோழமை, நட்பு, அன்பு, இனிய உறவு, அமைதி, நிம்மதி, … முதலியவற்றுக்குப் பதிலாக; இந்த வேதங்களாலும், மதங்களாலும் பிரிவு, வேற்றுமை, சண்டை, சச்சரவு, கலகம், குழப்பம், பகைமை, போட்டி, போராட்டம், போர், கவலை … முதலியவை விளைந்திட்டன. இதனால், மணுநீதியார்கள் உருவாக்கிய ‘மணு நீதி நூல்கள்’ பயனற்றனவாயின.


    தொடர்புடையவை: