இருக்கு வேதம் காண்டம்-4, மண்டலம்-11, நாள் உரைக்கோவை வாசகம்-27
“அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்கள் பொருளுலக வாழ்வுக்குத் தேவையான அருளுலக சத்தி முத்திகளைப் பெற்று தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நான்கு வகை வாழ்விலும் நலம் பயப்பதற்காக மகளிர்களே அனைத்து வகைப்பட்ட பூசைகளையும், நூற்றுத் தொண்ணூற்றிரண்டு வகைப்பட்ட உண்ணாழிகளிலும் நிகழ்த்திடக் கூடிய பூசாறிகளாக, குருக்கள்களாக, குருமார்களாக, குருதேவர்களாகப் பொறுப்போடு செயல்பட்டிடல் வேண்டும். உலகியல் காரணங்களால் ஆண்களே பூசாறிகளாக, குருக்கள்களாக, குருமார்களாக, குருதேவர்களாக செயல்பட்டிட்டாலும் மகளிரைத்தான் பூசைக்குரிய மலராகப் பயன்படுத்திட முடியும் என்பதையே சத்தி சித்தி முத்தியெலாம் தரும் தந்தர தந்திர தந்திற தாந்தர தாந்தரீகப் பூசைநெறிமுறைகள் விளக்குகின்றன என்று பெண்களின் அருளுலகப் பொருளுலக இன்றியமையாமையை விளக்கி அருளியுள்ளனர்.”