• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-01:02:01
  • இருக்கு வேதம்-01:02:01

    01:02:01

    இருக்கு வேதம் காண்டம்: 1 மண்டலம்: 2 நாள் உரைக்கோவை வாசகம்: 1

    (1) விலங்குகளோடு விலங்குகளாக வாழும் மணீசனை; மணீசனோடு வாழும் மனிதனாக மாற்றிட மனதை உண்டாக்குவதே (இந்துவேதம்) அருளுலகம்.

    (2) மனதைப் பண்படுத்துவதே அருளுலகம் (இந்துவேதம்).

    (3) மனதைத் தூய்மைப் படுத்துவதே அருளுலகம் (இந்துவேதம்).

    (4) மனதை வாய்மைப் படுத்துவதே அருளுலகம் (இந்துவேதம்).

    (5) மனதிற்கு அமைதியைத் தருவதே அருளுலகம் (இந்துவேதம்).

    (6) மனதிற்கு நிம்மதியைத் தருவதே அருளுலகம் (இந்துவேதம்).

    (7) மனதிற்கு நிறைவைத் தருவதே அருளுலகம் (இந்துவேதம்).

    (8) மனதிற்கு விடுதலையைத் தருவதே அருளுலகம் (இந்துவேதம்).

    (குறிப்பு:-
    அருளுலகம், அருள்வாழ்வு, அருளுலக வாழ்வு, அருளுலக வாழ்வியல் … என்ற சொற்கள் மாறி மாறி இந்துவேத வாசகங்களில் பயன்படுத்தப் படுகின்றன. இது ஏடு பெயர்த்து எழுதியவர்கள், அதாவது நகல் எழுதியவர்கள் காலப்போக்கில் செய்த பிழையாக, தவறாக இருக்கலாம். இந்துவேதத்தின், அதாவது இருக்கு வேதத்தின் பல காண்டங்களில் இதேபோல் ஒரே பொருளையுடைய சொற்கள் மாறி மாறி பயன்படுத்தப் பட்டிருப்பதை இந்துவேதத்தின் ஏடுகளில் காணலாம்.)

    (9) மனிதத்தைக் காப்பதே அருள்வாழ்வு (இந்துவேதம்).

    (10) மனிதத் தத்துவத்தை வளர்ப்பதே அருள்வாழ்வு (இந்துவேதம்).

    (11) மனித உணர்வை விழிப்பாக வைத்திருப்பதே அருள்வாழ்வு (இந்துவேதம்).

    (12) மனித உணர்வை செழிப்பாக வைத்திருப்பதே அருள்வாழ்வு (இந்துவேதம்).

    (13) மனித உணர்வை சீராகச் செயல்படச் செய்வதே அருள்வாழ்வு (இந்துவேதம்).

    (14) மனித அன்பை ஊற்றெடுக்கச் செய்வதே அருள்வாழ்வு (இந்துவேதம்).

    (15) மனிதப் பற்றை விளைவிப்பதே அருள்வாழ்வு (இந்துவேதம்).

    (16) மனிதப் பாசத்தை வளப்படுத்துவதே அருள்வாழ்வு (இந்துவேதம்).

    (17) மனித நெஞ்சத்தைத் தரப்படுத்துவதே அருளுலக வாழ்வு (இந்துவேதம்).

    (18) மனித நெஞ்சத்தைத் திரப்படுத்துவதே அருளுலக வாழ்வு (இந்துவேதம்).

    (19) மனித நெஞ்சத்தைத் திறப்படுத்துவதே அருளுலக வாழ்வு (இந்துவேதம்).

    (20) மனித நெஞ்சம் திறந்தேயிருக்கும்படிச் செய்வதே அருளுலக வாழ்வு (இந்துவேதம்).

    (21) மனித நெஞ்சில் இரக்கவுணர்வு ஊற்றெடுக்கச் செய்வதே அருளுலக வாழ்வு (இந்துவேதம்).

    (22) மனித நெஞ்சில் ஈகையுணர்வு ஊற்றெடுக்கச் செய்வதே அருளுலக வாழ்வு (இந்துவேதம்).

    (23) மனித நெஞ்சில் அடைக்கல உணர்வை ஊற்றெடுக்கச் செய்வதே அருளுலக வாழ்வு (இந்துவேதம்).

    (24) மனித உள்ளத்தின் ஆசைகளை மட்டுப்படுத்துவதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (25) மனித உள்ளத்தின் உறவுணர்வை பயிராக்குவதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (26) மனித உள்ளத்தில் நீதியை நிலைநாட்டுவதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (27) மனித உள்ளத்தில் நேர்மையுணர்வை ஊற்றெடுக்கச் செய்வதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (28) மனித உள்ளத்தில் பிற மனிதரை மதிக்கும் உணர்வை பயிராக்குவதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (29) மனித உள்ளத்தில் பிறரோடு கூடிவாழும் உணர்வை விளைவிப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (30) மனித உள்ளத்தில் தன்மான உணர்வைத் தழைக்கச் செய்வதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (31) மனித உள்ளத்தில் தன்னம்பிக்கை உணர்வைப் பிழைக்கச் செய்வதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (32) மனித உள்ளத்தில் தனித்த இயல்புகளை [பாட வேறுபாடு –> தனித்த இயல்புகளை = தனித்தப் பண்பியல்புகளை என்று சில ஏடுகளில் பாடவேறுபாடு இருக்கிறது அல்லது காணப்படுகிறது.] பேணி வளர்ப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (33) மனித உள்ளத்தில் பொறுப்புணர்வைப் பயிராக்குவதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (34) மனித உள்ளத்தில் பொறுமையுணர்வை விளைவிப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (35) மனித உள்ளத்தில் நிதானப் போக்கையும், நோக்கையும் விளைவிப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (36) மனித உள்ளத்தில் சமாதான விருப்பத்தை விளைவிப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (37) மனித உள்ளத்தில் அழகுணர்ச்சியைத் தொடர்ந்து விளைவிப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (38) மனித உள்ளத்தில் தொடர்ந்து தோழமை உணர்வை வளர்த்துக் கொண்டேயிருப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (39) மனித உள்ளத்தில் நட்புணர்வை தொடர்ந்து விளைவித்துக் கொண்டே இருப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (40) மனித உள்ளத்தில் தொண்டுணர்வுகளை தொடர்ந்து விளைவித்துக் கொண்டேயிருப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (41) மனித உள்ளத்தில் அறிவுக்கு அப்பாற்பட்டனவற்றில் அக்கறையையும், ஆர்வத்தையும் தொடர்ந்து வளர்த்துக் கொண்டேயிருப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (42) மனித உள்ளத்தில் எதையும் தொடர்ந்து பயிற்சி செய்து பார்ப்பதில் அக்கறையையும், ஆர்வத்தையும் நிலையாக வளர்த்துக் கொண்டேயிருப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (43) மனித உள்ளத்தில் எதையும் தொடர்ந்து முயற்சி செய்து பார்ப்பதில் அக்கறையையும், ஆர்வத்தையும் நிலையாக வளர்த்துக் கொண்டேயிருப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (44) மனித உள்ளத்தில் எந்தத் தேர்ச்சி கிடைத்தாலும், அத்தேர்ச்சிக்குத் தொடர்ச்சியாக பயிற்சிக்குரிய முயற்சிகளைத் தொடர்ந்து செய்யுமாறு ஊக்குவித்துக் கொண்டிருப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (45) மனித உள்ளத்தில் எத்தகைய முதிர்ச்சி கிடைத்தாலும், அதனால் தளர்ச்சியோ, அயர்ச்சியோ அடைந்து விடாமல் தொடர்ந்து பாதுகாத்து ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (46) மனித உள்ளத்தில் ஏக்கத்தாலும், ஏமாற்றத்தாலும் ஏற்படும் எரிச்சலால் தேக்கமும், வீக்கமும், முடக்கமும், அடக்கமும், ஒடுக்கமும் ஏற்பட்டு விடாமல் காப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (47) மனித உள்ளத்தில் தோல்வியும், தொல்லையும், துன்பமும் உருவாக்கும் தொய்வையும், தேய்வையும், மாய்வு நிலைக்குக் கொண்டு சென்றுவிடாமல் காப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).

    (48) மனித உள்ளத்தில் வறுமை, வெறுமை, அடிமை, மிடிமை, இல்லாமை, இயலாமை முதலியவற்றால் இழிவழிவில் நாட்டமும், நம்பிக்கையும் ஏற்பட்டு விடாமல் தடுத்துக் காப்பதே அருளுலக வாழ்வியல் (இந்துவேதம்).


    தொடர்புடையவை: