முகப்புப் பக்கம்>
சூலகங்கள்>
இருக்குவேதம்>
இருக்கு வேதம்-01:09:22
இருக்கு வேதம்-01:09:22
01:09:22
இருக்குவேதம் காண்டம் 1; மண்டலம் 9; நாள் உரைக்கோவை வாசகம் 22:-
“அனாதில் காலமெனப்படும் நானூற்று எண்பத்தைந்து ஆயிரமாண்டுகளுக்கு மேல் தொளாயிரத்து இருபது ஆண்டுகளுக்கும் உரிய மிகப்பெரிய கால இடைவெளியில்; இம்மண்ணுலகுக்கு வந்திட்ட பல்லாயிரக் கணக்கான பதினெண்சித்தர்கள் குழுக்களின் தலைவர்களான அனாதிசிவன்கள்; இம்மண்ணுலக பயிரின உயிரினங்களின் ‘ஈசர்களாகத்’ தோன்றி தலைமை வாழ்வு வாழ்ந்திட்ட (மண் + ஈசர்கள்) ‘மணீசர்களை’ ஒழுங்குபடுத்திட அரும்பாடு பட்டார்கள். அப்பொழுது அவர்களுக்குத் துணையாக இம்மண்ணுலகில் உருவாகிட்ட அருளுலகத்தவர்கள் ‘மண்ணுலக ஐவர் குழு’ என்று ஒன்றுதிரட்டப்பட்டார்கள். அவர்கள்
- முப்பத்துமூவாயிரம் கோடி தேவர்கள்
- நாற்பத்தெட்டாயிரம் கோடி இருடிகள்
- ஆயிரம் கோடி தேவதைகள்
- தொண்ணூற்றாறு ஆயிரம் கோடி கணங்கள்
- நூற்றெட்டாயிரம் கோடி முனிவர்கள்
ஆவார்கள். இவர்களனைவரும் காலப்போக்கில் ஒன்று திரண்டு; அனாதிக்காலத்தில் இம்மண்ணுலகுக்கு வந்திட்ட பல்லாயிரக் கணக்கான பதினெண்சித்தர் குழுக்களின் பீடாதிபதிகளான ‘அனாதிசிவன்களு’க்குத் துணையாக இருந்து உதவி செய்தார்கள். அதனால், இம்மண்ணூலகுக்குரிய ‘நீதி நூல்கள்’ உருவாயின. இப்படி அனாதிசிவன்கள், இம்மண்ணுலக வாழ்வுக்குரிய ‘மணுநீதி’யை உருவாக்குவதற்காக அனுப்பப்பட்டதால்; இவர்கள் ‘மணுநீதியார்கள்’ என்று குறிக்கப்படுகின்றனர். இவர்களின் சிறப்புக் கருதியே பதினெண்சித்தர்கள் குழுவின் ‘மணுநீதியார்’ என்ற பெயர் ஒருவருக்கு வழங்கப்பட்டது.