21:18:36
அதர்வான தேவம், காண்டம்:21 மண்டலம்:18 நாள் வாசகம்:36
“அண்ட பேரண்ட அருளுலக ஆட்சியினை நிகழ்த்தும் மூலப் பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும் இம்மண்ணுலகில், அருளுலகை முறையாகவும், நிறைவாகவும் உருவாக்கிட அனுப்பிய விண்ணுலக ஐவர்கள் எனப்படும்.
1. பதினெண் சித்தர்கள்
2. பதினெட்டாம்படிக் கருப்புகள்,
3. நாற்பத்தெட்டு (48) வகைப்பட்ட கடவுள்கள்.
4. நாற்பத்தெட்டு (48) வகைப்பட்ட வழிபடு நிலையினர்கள்
5. நாற்பத்தெட்டு (48) வகைப்பட்ட சித்தர் நிலையினர்கள் ஆகியவர்களும், மண்ணுலக ஐவர்கள் எனப்படுகின்ற
1. முப்பத்து மூவாயிரம் (33,000) கோடி தேவர்கள்
2. நாற்பத்தெட்டாயிரம் (48,000) கோடி இருடிகள்,
3. ஆயிரங் கோடி (1000) தேவதைகள்
4. தொண்ணூற்றாறாயிரம் (96,000) கோடி கணங்கள்.
5. நூற்றெட்டாயிரம் (108,000) கோடி முனிவர்கள் ஆகியவர்களும், இம் மண்ணுலகுக்கென எட்டு இலட்சத்து எண்பத்து நாலாயிரத்து எழுநூற்றி முப்பத்தாறு (8,84,736) வகைப்பட்ட கடவுளர்களைப் பயன்படுத்தித்தான் அருளுலக நிறுவன நிர்வாகங்கள் அனைத்தையும் உருவாக்கி இருக்கின்றார்கள். இவர்களைக் கொண்டுதான்.
1.வானுலகு, 2.விண்ணுலகு, 3.விசும்பு உலகு 4.ஆகாய உலகு, ககன உலகு, 6.பரவெளி உலகு, 7.*பால்வெளி உலகு (இந்த *பால்வெளி உலகு என்ற சொல்லுக்கு சில ஏடுகளில் “பாழ்“ வெளி உலகு என்ற பாடவேறுபாடு காணப்படுகின்றது) எனும் ஏழு உலகுகளுக்கும் உரிய அதர்வான வேத 1.அத்தர 2.அத்திர 3.அத்திற 4.சாத்தர 5.சாத்திர 6.சாத்திற 7.சூத்தர 8.சூத்திர 9.சூத்திற 10.தோத்தர 11.தோத்திர 12.தோத்திற 13.நேத்தர 14.நேத்திர, 15.நேத்திற 16.வேத்தர 17.வேத்திர 18.வேத்திற ஓச்சுக்களையும், வீச்சுக் களையும் செயலாக்க முடியும். இப்படி ஓச்சுக்களையும், வீச்சுக்களையும் செயலாக்குவதற்கு அந்தந்த நாட்டில் விளையும் இயற்கைப் பொருள் களையும், இனத்தவருக்கு உரிய வாழ்வியல் உடை, உணவு, அணிகலன்.. முதலிய பொருள்களையும், மொழிக்குரிய எழுத்துக்களையும், சொற்களையும், சொற்றொடர்களையும்,வாக்குகளையும் வாக்கியங்களையும் வாசகங்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.