07:21:42
அதர்வான வேதம் காண்டம் 7 மண்டலம் 21 நாள் வாசகம்42
“அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்களும், பதினெட்டாம் படிக்கருப்புகளும், தங்களுடைய தாய் மொழியும், அண்ட பேரண்டமாளும் அருளுலகக் ஆட்சி மொழியுமான அருளூறு ஆமுதத் தெய்வீகச்செந்தமிழ் மொழியில் குண்டழினி, குண்டலினி, குண்டளினி என்ற மூன்றுக்கும் செந்தமிழ் மொழிக்குரிய முன்னூற்று இருபத்து மூன்று(323) எழுத்துக்களிலும் தனித்தனி எழுத்துக்களை தேர்ந்தெடுத்து அறிவித்திருப்பதை, உடம்பில் உள்ள முப்பத்திரண்டு அங்கங்களிலும் இட்டும், தொட்டும், சுட்டியும் பதிவு செய்து கொண்ட பிறகுதான் பயிற்சியினை துவக்கவேண்டும். இல்லையேல், குண்டழினிடயும் மாயையே, குண்டலினியும் மாயையே, குண்டளினியும் மாயையே!..