08:36:39
அதர்வான வேதம்: காண்டம்-8, மண்டலம்-36, நாள்வாக்கியம்-39
“இப்பூவுலகில், இப்பூமியில், இப்புவியில், இவ்வையகத்தில், இம்மாஞாலத்தில், இவ்வுலகில் தோன்றிட்ட பயிரினங்களுக்கும், உயிரினங்களுக்கும் ஈசர்களாகத் தோன்றியுள்ள மணீசர்களில் மிக எளிதாக மொழி, இனம், நாடு, மதம் கடந்து அகத்துள் எழுப்புகின்ற மூலாதாரப் பிறணவ ஒலிகளின் மூலம் தங்களுடைய சீவனில் அடங்கியிருக்கும் ஆவி, ஆருயிர், ஆன்மா என்ற மூன்றையும் தனித்தனியாகப் பிரிக்கும் கலையைக் கற்றிட, நோற்றிட உதவுவதற்காகவே நுட்ப, திட்ப ஒலிகளை சுவைமிக்க இனிய பொருளாழமுடைய அருளாற்றல் ஊற்றெடுக்கின்ற சொற்களால் உருவாகிட்ட இருபத்து மூன்று வகைப்பட்ட காயந்திரிகளில் நான்கே நான்கு காயந்திரிகளை மட்டும் தேர்ந்தெடுத்து;
க. “அருட்சினை காயந்திரி மந்திறம்”
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயே உனை வாழ்த்தி வணங்குகிறேன்.
ஏனோவாகி இன்னல் பல்லாற்றானும் உழல்பவர்க்கு
நானாகிய அடியேன் நலம் வேண்டுகிறேன்.
தானாகவே தழல்தரு கொடுமைமிகு துயரமெல்லாம்
வீணாகி விலகியோடி ஒழியட்டும்.
உ. “அருளூறு காயந்திரி மந்தரம்”
ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக!
தத்துவ வித்துக்கள் அரணாகுக!
பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்
தீயே யோகப் பரஞ்சோதி யாகும்!
ங. “அருளூறு காயந்திரி மந்திரம்”
ஓம் சத்தியே காத்தாயி அயனாய வித்தின் மகவே
வாலையே கன்னியே குமரியே நங்கையே தீயென மலர்ந்திடு
தீயே உன்னோடு தூர்த்திடு பிறச்சினையாவும்
தாயே என்னோடு உயிரினப் பயிரினக் காப்புவழங்கிடு.
ச. “கற்பூர சோதி வழிபாட்டு காயந்திரி மந்தரம்”
கற்பூரம் பாக்கு வெற்றிலை பழம் தேங்காய்
பக்குவமாய்ப் பண்ணிய பலகாரங்கள் பலவும்
படைத்தேன் ஏற்றிடுக! ஏற்றிடுக! ஏற்றிடுக!
அனைத்தையும் காத்திடுக! காத்திடுக! காத்திடுக!
அருள் செழித்திடுக! செழித்திடுக! செழித்திடுக!
எங்கும் நலம் விளைக! நலம் விளைக! நலம் விளைக!
நான்மறையே நான்முறையே நானெறியே நான்வேதமே
வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!
அன்றாடப் பூசைமொழி என்று பெயரிட்டு இந்துவேத, இந்துமத தலைமை ஆச்சாரிய குருபீடமான ஆதிசிவனார் அதர்வான வேதத்தில் அருளியுள்ளார். இதனைப் பயிற்சி செய்வதற்காகவே அதர்வான வேதத்தில் குண்டலினி, குண்டளினி, குண்டழினி என்ற மூன்றையும் பற்றிய பயிற்சிக்கு இந்த அன்றாடப் பூசைமொழியில் கூறியுள்ள நான்கு காயந்திரிகளை மட்டும் வாழ்வில் ஓய்வும், வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் குறைந்தது பதினெட்டு, முப்பத்தாறு, நாற்பத்தெட்டு, அறுபத்துநான்கு, தொண்ணூற்றாறு, நூற்றெட்டு முறை என்று ஓதிப் பயிற்சி செய்ய வேண்டும். அன்றாடம் 108 முறைகளுக்கு மேலே நூற்றுக் கணக்கில் இந்த அன்றாடப் பூசைமொழியில் உள்ள நான்கு காயந்திரிகளையும் ஓதுபவர்கள் மிக விரைவில் ஆவி, ஆருயிர், ஆன்மா என்ற மூன்றையும் சீவனிலிருந்து பிரித்திடவும்; பிரித்தவற்றால் கூடுவிட்டுக் கூடு பாய்தல், ககன மார்க்கப் பயணம், காற்று கருப்பு பேய் பிசாசு என்றா நால்வர்களையும் இனங் கண்டுகொள்ளல்; குடும்ப ஆண்டவர், குலதெய்வம், கிராமதேவர் தேவதை, நாட்டுக் கடவுளர் எனும் நால்வரோடு தொடர்பு கொள்ளவும்; தாங்களே பிறவாமை, இறவாமை, பிறப்பிறப்பற்ற பெருநிலை (மரணமிலாப் பெருவாழ்வு) முதலியவைகளைப் பெற்றிடவும் முடியும், முடியும், முடியும். இதனால், இந்த அன்றாடப் பூசைமொழி நான்கு வேதத்திலும் ‘அன்றாடப் பூசைமொழி அமுது’, ‘அன்றாடப் பூசைமொழி எனும் கற்பகத் தரு’ என்று அறிமுகப் படுத்தப்படுகிறது.