08:24:00
அதர்வான வேதம் காண்டம்: 8, மண்டலம்: 24 முழுவதும்
காண்டம்: 8, மண்டலம்: 38 முழுவதும்
காண்டம்: 44, மண்டலம்: 47 முழுவதிலும்,
காண்டம்: 48 எல்லா மண்டலங்களிலும்
சாதி தொடர்பான சிக்கல்கள் தவசிகள், மகான்கள், ஞானிகள், ஐந்தீ வேட்டல் வல்லார்கள், முத்தீ ஓம்பும் வல்லவர்கள், ஓகிகள், யோகிகள், மோகிகள், போகிகள், வேத கணபாடிகள், வாத்தியார்கள், வேத வித்துக்கள், வேத செவித்தியார்கள், வேத உருத்தரர்கள், உருத்திரர்கள், உருத்திறர்கள், வேதியார்கள், வேத போதகர்களான ஆச்சாரியார்கள், வேத சாதகர்களான சாதுக்கள், ... முதலியவர்களுக்கிடையிலும் முளைவிட்டு, கிளைவிட்டு, செழித்து வளர்வதைக் கண்டிக்கும் கருத்துக்கள் உள்ளன. சாதி தொடர்பான சிக்கல்கள் வன்மையாகக் கண்டிக்கப் படுகின்றன.
சாதிகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு கிடையாது, உயர்வு தாழ்வு கிடையாது, பிரிவினைகள் கிடையாது, எல்லா சாதியினரும் இப்பூவுலகின், இப்புவியின், இப்பூமியின், இம்மாஞாலத்தின் மணீசர்களே ஆவார்கள். எனவே, சாதியின் பெயரால், மணீசர்கள் வேற்றுமைகளை வளர்த்து ஒற்றுமையையும், சமாதானத்தையும், ஆண் பெண் உறவு முறைகளையும், உரிமைகளையும், குடும்பக் கட்டமைப்பு சட்டதிட்டங்களையும், சமுதாயக் கட்டுக்கோப்பு செயல்திட்டத்தையும் சிதைத்து விடக் கூடாது! சீரழித்து விடக் கூடாது! அதாவது குடும்ப ஆண்டவர்களாக மாறிய சாதுக்களின் பெயர்களால்தான் அவர்களுடைய வாரிசுகள், தங்களை குறிப்பிட்ட சாதுக்களை ஆதியாகக் கொண்ட சாதியினர் என்று பெயரிட்டுக் கொண்டார்களே தவிர குறிப்பிட்ட சாதியினர் என்று எதுவும் கிடையாது.