01:08:21
அதர்வான வேதம் காண்டம்: 1, மண்டலம்: 8, நாள்வாக்கிய மலர்கள்: 21 முதல் 48 வரை.
மண்ணுலகு கடந்து இருக்கின்ற ஏழு வெளிகளில் உள்ளவர்கள், இம்மண்ணுலகுக்கு வந்து நேரடியாகச் செயல்பட்டு செல்பவர்களும் உண்டு. இங்கேயே நிலையாக தங்கி இருந்து செயல்படுவதும் உண்டு. இப்படிப்பட்ட ஏழு வெளியினர்களையும் எதிர்பாராமல் தெரிந்து, பூசை செய்து, பத்தி சத்தி சித்தி முத்திகளில் தேர்ந்து குடும்ப ஆண்டவர்களாக மாறுகிறவர்களும் உண்டு. எனவேதான், குடும்ப ஆண்டவர்களிலேயே மானுட உடல் அமைப்புக்களிலும் வாழ்வியல்களிலும் மாறுபட்ட அமைப்புக்களையும், பண்புகளையும் உடையவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பூசை செய்யும் நெறி முறை விதிகள் குறிப்பிட்ட குடும்பத்தவர்களை மட்டும் அன்றி, மற்ற குடும்பத்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவைகளாகவே இருக்கும்.
இதன்படிப் பார்த்தால் இந்துமதத்தைச் சேராதவர்களும், இந்துமதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும், பகுத்தறிவு வாதிகள், நாத்திக வாதிகள், சீர்திருத்த வாதிகள் எனப்படுகிறவர்களும், குடும்ப ஆண்டவர்களின் பூசை நெறிமுறைகள் பற்றிக் கேட்கின்ற எந்தக் கேள்விக்கும் அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் அல்லது அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் வெளிப்படையாக இந்து வேதப் பேருண்மைகளைக் கூற முடியாது, கூறக் கூடாது.