18:36:43
யாமவேதம் காண்டம்-18, மண்டலம்-36, நாள் வாசகம்-43
“இம்மண்ணுலகில் பயிரினங்களையும் உயிரினங்களையும் பாது காப்பதற்காக, நூற்றுத் தொண்ணூற்று இரண்டு (192) வகைப்பட்ட உண்ணாழிகளை உடைய நாற்பத்தெட்டு வகைப்பட்ட கோயில்களை இம்மண்ணுலகுக் காக விண்ணுலகில் இருந்து வந்திட்ட பதினெண் சித்தர்களும், பதினெட்டாம் படிக்கருப்புகளும், நாற்பத்தெட்டு வகைப்பட்ட கடவுள் நிலையினர்களும், நாற்பத்தெட்டு வகைப்பட்ட வழிபடு நிலையினர்களும், நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தர் நிலையினர்களும் படைத்திட்டார்கள். இந்த உண்ணாழியிலுள்ள கடவுள்கள் எட்டு இலட்சத்து எண்பத்து நாலாயிரத்து எழுநூற்றி முப்பத்தாறு (8,84,736) வகைப்படுவார்கள் என்றாலும், இவர்கள் எந்தெந்த நாட்டில் இருக்கின்றார்களோ அந்தந்த நாட்டில் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருள்களைத் தான் படையலாகப் படைக்க வேண்டும், இக்கடவுள்கள் எந்த இன மக்களால் வழிப்படுகிறார்களோ அந்த இனமக்கள் பயன்படுத்திக் கூடிய உடைகளையும் அணி கலன்களையும், வாசனைப் பொருள்களையும், மலர்களையும், இலைகளையும், பட்டைகளையும், வேர்கள் ... முதலியவைகளையும் தான் பூசையில் பயன்படுத்த வேண்டும், இக்கடவுள்கள் எந்த மொழியினரால் பத்தி செய்யப்படுகிறார்களோ! அந்த மொழிக்குரிய எழுத்துக்களையும், சொற்களையும், சொற்றொடர்களையும், வாக்குகளையும், வாக்கியங்களையும், வாசகங்களையும், பயன்படுத்தித்தான் பூசை மொழிகளையும், பூசை விதிகளையும், பிறவற்றையும் செயலாக்க வேண்டும், அப்பொழுதுதான், இக் கடவுள்கள் உயிர்ப்பு நிலைகளையும், புத்துயிர்ப்பு நிலைகளையும் குறிப்பாகப் பெற்ற அருளுலகப் பயன்களை மக்களுக்கு வழங்கிட முடியும்”