09:16:36
யாமவேதம் (சாமவேதம) காண்டம் 9 மண்டலம் 16 நாள் வாசகம் 36
“குண்டழினி, குண்டலினி, குண்டளினி... என்ற மூன்றுதான் அசுரவேதம், யாமவேதம், அதர்வான வேதம் என்ற மூன்றை தனித்தனி வேதங்களாக பிறப்பித்துள்ளன என்ற பேருண்மை தெரிந்தால்தான், புரிந்தால் தான் பத்தி, சத்தி, சித்தி, முத்தி.. எனும் நான்கும் உரிய பயனை பெரிய அளவில் விளைவித்துத்தரும். அதாவது குடகுழுக்கு பூசையை செய்து வழிபாட்டுக்குரிய, பூசைக்குரிய, கும்பிடுதலுக்குரிய, வணங்குவதற்குரிய, தொழுகைக்குரிய, அழுகைக்குரிய, எள்ளலுக்குரிய, ஏசலுக்குரிய (எனும் எட்டு வகையான அருளுலக அணுகுமுறைகளுக்கும் உரிய) மூலவர்களுக்கு உயிர்ப்பையும், புத்துயிரப்பையும் செய்யமுடியும். தங்களுக்குள் தாங்களே கற்றல், நோற்றல், உற்றல், பெற்றல் என்ற நான்கும் வறுமையையோ, வெறுமையையோ அடைந்திடாமல் இருக்கும் படிச் செய்ய முடியும்."