01:08:01
யாம வேதம் காண்டம்: 1, மண்டலம்: 8, நாள் வாசக மலர்கள்: 1 முதல் 48 வரை.
குடும்ப ஆண்டவர்களைப் பூசை செய்யும் நெறி முறைகள் விளக்கப் படுகின்றன. அது மட்டுமல்லாமல், இந்த முதல் காண்டத்தில் 'அருளுலக நால்வர்கள்' எனப்படும் குடும்ப ஆண்டவர்கள், குலதெய்வம், கிராம தேவர் தேவதை, நாட்டுக் கடவுளர் எனும் நால்வரையும் பற்றி ஏராளமான செய்திகள் தரப்பட்டிருக்கின்றன. குறிப்பாக,
ஓமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி எனும் ஐந்தீ வேட்டல் முறை பற்றியும்;
இம்மண்ணுலக அருளுலக நால்வர்கள், மற்ற உலகங்களைச் சேர்ந்த நால்வர்கள் பற்றியும்;
அருளுலகில் பூசை செய்யக் கூடிய திருமுறை நெறி, தருமுறை நெறி, கருமுறை நெறி, குருமுறை நெறி என்பவை பற்றியும்;
அருளுலகத்தவர்களில் திருக்கல்கள், தருக்கல்கள், கருக்கல்கள், குருக்கல்கள் எனும் நான்கு வகைப்பட்ட அருளுலக நால்வர்கள் பற்றியும்;
அருளுலக நால்வர்களில் அருவ நிலையினர், அருவுருவ நிலையினர், உருவ அருவ நிலையினர், உருவ நிலையினர் எனும் நான்கு வகையினரைப் பற்றியும்
மிகமிக விரிவாகவும், விளக்கமாகவும், எளிமையாகவும், தெளிவாகவும், திட்டவட்டமாகவும் வரையறை செய்யப்பட்ட பேருண்மைகள் கூறப்பட்டுள்ளன.