• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • யாமவேதம்>
  • யாம வேதம்-020109
  • யாம வேதம்-020109

    02:01:09

    யாமவேதம் காண்டம்-2, மண்டலம்-1, நாள்வாசகம்-9

    ஒவ்வொரு குடும்பமும், பல குடும்பங்கள் சேர்ந்த குலத்தவர்களும், அதாவது ஒரே குடும்பத்திலிருந்து பிரிந்து வளர்ந்த பங்காளிகள், உறவு முறையினர் தங்களை ஒரே குலத்தவராக நம்பி வாழ்பவர்கள், தங்களுடைய குலத்துக்கு உட்பட்ட குடும்பத்தார்களில் குலத்தார்களின் நல்வாழ்வுக்கென பொதுத் தொண்டாற்றி தலைவர்களாக வாழ்ந்து தியாகங்களைச் செய்து, மாண்டு ஆண்டவர்கள் ஆனவர்களாகி குலதெய்வங்களாக வாழுபவர்களை மாதத்திற்கு ஒருமுறையாவது முழுமையாக நினைத்து அவர்களை அவர்கள் புதைக்கப்பட்ட புதைகாட்டில் அல்லது எரிக்கப்பட்ட சுடுகாட்டில் அமாவாசை பகலிலோ, அல்லது பெளர்ணமி முழுநிலவு பருவநாள் மாலையிலோ, இரவிலோ பூசைசெய்தோ, கும்பிட்டோ, வழிபாடு செய்தோ, வணங்கியோ, அழுகை செய்தோ, தொழுகை செய்தோ, எள்ளல் செய்தோ, ஏசல் செய்தோ பத்தி செய்திடல் வேண்டும். அப்பொழுதுதான் ஒவ்வொரு குடும்பமும், அந்தக் குடும்பம் சார்ந்த குலத்துக்குரிய குடும்பங்களுக்கிடையிலும், நல்ல ஒற்றுமை, பற்று, பாசம், உறவு, அன்பு முதலிய நல்லியல்புகள் வளமாக விளைந்து நல்ல கொழுமையான பயன்களை நல்கிடும்! வளமாக விளைந்து நல்ல கொழுமையான பயன்களை நல்கிடும்! வளமாக விளைந்து நல்ல கொழுமையான பயன்களை நல்கிடும்!


    தொடர்புடையவை: