• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • யாமவேதம்>
  • யாம வேதம்-020108
  • யாம வேதம்-020108

    02:01:08

    யாம வேதம் காண்டம்-2, மண்டலம்-1, நாள்வாசகம்-8

    ஒவ்வொரு தனிமனிதரின் உள்ளத்திலும், ஒவ்வொரு குடும்பத்திற்குரியவர் இல்லத்திலும் நிம்மதி, நிறைவு, அமைதி, மகிழ்ச்சி, அச்சமற்ற நிலை, கவலையற்ற நினை, தொல்லையற்ற நிலை, வெறுமையற்ற நிலை, வறுமையற்ற நிலை, ஏக்கமற்ற நிலை, ஏமாற்றமற்ற நிலை, எரிச்சலற்ற நிலை, தேக்கமற்ற நிலை, முடக்கமற்ற நிலை, நடுக்கமற்ற நிலை, … ஏற்பட்டு தன்னம்பிக்கை நிறைந்த இனிய வெற்றி நிலைகள் ஊற்றெடுத்து ஆற்றுப் பெருக்காய் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு தனிமனிதரும், குடும்பத்தவர்களும் தங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ‘மாண்டு ஆண்டவர்களானவர்கள்’ யார்யார் என்று கண்டுபிடித்து, அவர்களை யெல்லாம் மாதம் தவறாமல் அமாவாசையிலோ அல்லது பெளர்ணமியிலோ அவர்கள் புதைக்கப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று தங்கள் தங்கள் வசதி வாய்ப்புக்களுக்கேற்ப படையலிட்டு பூசை செய்து வர வேண்டும்.


    தொடர்புடையவை: