01:08:48
அசுர வேதம் காண்டம்: 1, மண்டலம்: 8, நாள் வாக்கு மலர்: 48
மனிதர்களாக பிறப்பவர்கள்தான் 'குடும்ப ஆண்டவர்கள்' என்று உருவாகி, ஏழு தலைமுறையினர்க்கு வழிவழியாக உதவி செய்கிறார்கள். எனவே, அருளுலக நால்வர்கள் என்று கோயில்களில் இருப்பவர்களுக்கு நேரடி பாரம்பரிய வாரிசுகளாக பிறப்பவர்கள் காலங்கள் தோறும் வாழ்ந்திடுகிறார்கள். அப்படிப் பட்டவர்களுக்குத்தான், இந்த அருளுலக நால்வர்கள் தங்களுடைய வாரிசுகளில் பத்தியும், அருள் யோகமும் உடையவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அருட்சத்திகளையும், சித்து விளையாடல் ஆற்றல்களையும், சித்துக்களை அத்து உயர்ந்திடும் சித்திகளையும், சித்திகளில் முதிர்ந்து பெற்றிடும் முத்திகளையும் வழங்கிடுகிறார்கள். எனவே, யாரும் 'எனக்கு ஏன் அருளுலக நால்வர்களான ஆண்டவர்கள் தெரிவதில்லை?! தெய்வங்கள் தெரிவதில்லை!? தேவர் தேவதைகள் தெரிவதில்லை!? கடவுளர்கள் தெரிவதில்லை!? ... என்று கேள்வி கேட்டு கலங்கி, குழம்பி, வருந்தி, புலம்பத் தேவையில்லை.