பத்தி 4
இந்த இந்து வேதத்தில் உள்ள எழுத்துக்களும், சொற்களும், சொற்றொடர்களும், உரத்த குரலில் ஒதப்பட்டு எழுப்பப் படுகின்ற ஒலி அலைகள்தான் பிண்டத்தை மற்ற பிண்டங்களோடும், அண்டங்களோடும், பேரண்டங்களோடும், அண்ட பேரண்டங்களோடும் இணைத்துப் பிணைக்கிறது.
இதே போல் இந்த இந்து வேத ஒலி அலைகள்தான் ஒவ்வொரு மனிதனுடைய முற்பிறப்பு, மறுபிறப்பு, இப்பிறப்பு ஆகிய மூன்றையும் இணைத்துப் பிணைத்து, இவற்றின் நல்லவை அல்லவைகளை கூட்டிக் கழித்து நிகழ்கால நடைமுறை வாழ்வுக்குரிய பொருளை விளக்குகின்றன.
இதே போல் இந்த இந்து வேத ஒலி அலைகள்தான் இறைவன் அல்லது கடவுள் என்பதையும், மனிதனுடைய உயிரையும், மனிதனுடைய சொந்த பந்த பற்றுக்களால் உருவாகும் பாசம் என்பதையும் இணைத்து மனிதனுக்குத் தேவையான அருளுலக வாழ்வுக்குரிய பக்குவங்களை விளைவித்துத் தருகின்றன.
இதனை விளக்கமாகக் கூறிட வேண்டுமென்றால், இந்து வேதத்தின் எழுத்து, சொல், சொற்றொடர் எனும் மூன்றும் உரத்த குரலில் ஒதப்பட்டு எழுப்பப்படும் ஒலி அலைகளால்தான் மனித வாழ்வுக்குத் தேவையான பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கும் படிப்படியாகக் கிடைக்கின்றன.
இந்த இந்து வேதத்தின் எழுத்து, சொல், சொற்றொடர் முதலிய மூன்றும் மனிதனுடைய ஆவி, ஆன்மா, ஆருயிர் என்ற மூன்றுக்கும் சமமானவை.
இந்த இந்து வேதம் எழுத்து, சொல், சொற்றொடர் எனும் வரிவடிவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு விரிந்து பரந்து எங்கும் வெகு வேகமாகச் செல்லக்கூடிய ஒலியாகத்தான் வாழுகிறது.
எனவே, இந்து வேதத்தை எழுத்துக்களின் வரிவடிவங்களுக்குள்ளோ அல்லது சொற்களின் பொருள் வடிவங்களுக்குள்ளோ அல்லது சொற்றொடர்களின் கருத்து விளக்க எல்லைகளுக்குள்ளோ உள்ளடக்கிக் கண்டிட முயலக்கூடாது, முயலக்கூடாது, முயலக்கூடாது என்று மூலப் பதினெண் சித்தர்களாலும் பதினெட்டாம்படிக் கருப்புகளாலும் மிகமிகத் தெளிவான வரையறுக்கப்பட்ட கருத்து அறிவிக்கப் பட்டிருக்கிறது, அறிவிக்கப் பட்டிருக்கிறது, அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இதுவே இந்த வேதத்தின் அளப்பரிய எல்லையற்ற விரிந்து பரந்துபட்ட அரிய பெரிய உயரிய, சீரிய, வீரிய, நேரிய நிலைமைகளை விளக்குகிறது, விளக்குகிறது, விளக்குகிறது,