• முகப்புப் பக்கம்>
  • அறிமுகவுரை>
  • வேதம் பற்றிய விளக்கம்
  • வேதம் பற்றிய விளக்கம்

    வேதம்

    இப்படி இந்து என்ற சொல் பதினெண்சித்தர்களின் அருளுலகப் பொருளுலகப் படைப்புக்களையும், அடைவுகளையும், உறவுகளையும், உரிமைச் சுற்றங்களையும், உரிய நண்பர்களையும், தோழர்களையும், முழுமையாகக் குறிக்கின்ற ஒரு சொல்லாக இருப்பதால்தான், வேதம் என்ற சொல்லை இந்த இந்து என்ற சொல்லோடு சேர்த்து இந்து வேதம் என்ற அருளுலக ஏட்டறிவு வடிவப் படுத்தப் பட்டது அல்லது உருவாக்கப் பட்டது.

    இதேபோல் இந்த இந்து என்ற சொல்லோடு மதம் என்ற சொல் சேர்க்கப்பட்டு இந்து மதம் என்ற அருளுலகப் பட்டறிவு வடிவப் படுத்தப் பட்டது அல்லது உருவாக்கப் பட்டது, இவை இரண்டுதான் அருளுலகுக்கும் கண்களாக விளங்குகின்றன. பொருளுலகுக்கும் கண்களாக விளங்குகின்றன.

    வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப் படுத்தப் பட்டது, பதப் படுத்தப் பட்டது, பண் படுத்தப் பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, நல்ல வழியாக இருப்பது, நல்ல வழிகாட்டியாக விளங்குவது, வழித்துணையாக இருப்பது, வழிப்பயனாக நிற்பது, உயிர் போன்றது, வாய்மையானது, மெய்மையானது, தூய்மையானது, துயரத்தைப் போக்க வல்லது, துன்பத்தைத் தடுத்து உடனடியாக அகற்ற வல்லது, உய்வினைத் தரக்கூடியது, உயர்வானது, உண்மையானது, உற்சாகத்தைத் தரக் கூடியது, உள்ளொளி வழங்குவது உலகு காப்பது, தொய்வினை நீக்க வல்லது, சோர்வினை மாற்ற வல்லது, அச்சத்தை அழிக்க வல்லது, கடவுளால் கூறப்படுவது, கடவுளைப் பற்றிக் கூறுவது… என்று பல பொருள்கள் உண்டு.

    எனவேதான் இந்துவேதம் என்ற சொல்லுக்கு இந்து என்ற சொல்லுக்கு உரிய பொருள்களும், வேதம் என்ற சொல்லுக்கு உரிய பொருள்களும் இரண்டறக் கலக்கப் பெற்று எண்ணற்ற புதுபுதுப் பொருள்களும், இரண்டுக்கும் உரிய பொருள்களும் கூறப் படுகின்றன.

    குறிப்பாக இந்து வேதம் என்றால் அழியாதது, செழிப்பானது, கொழுமையானது, வளமானது, வலிமையானது, வாலிப்பானது, பொலிவு மிக்கது, விழிச்சிக்குரியது, எழிச்சிக்குரியது, பயிற்சிக்குரியது, முயற்சிக்குரியது, உயர்ச்சிக்குரியது, மலர்ச்சிக்குரியது, மறுமலர்ச்சிக்குரியது, வளவளர்ச்சிக்குரியது, ஆட்சிக்குரியது, மாட்சிக்குரியது, மீட்சிக்குரியது, கடவுளைக் காண உதவுவது, மனிதனைக் கடவுளாகவே காண வல்லது, கடவுளை உடனடியாக உதவிக்கு வரவழைப்பது, அருளுலகோடு உறவு கொள்ள உதவுவது, பிறப்பிறப்பை வெல்ல உதவுவது, பேரின்பத்தைத் தர வல்லது, எதையும் கடவுளாக்கும் வல்லமை பெற்றது. எல்லாக் கடவுள்களோடும் தொடர்பு கொள்ள உதவுவது, எல்லா வகையான போதனைகளையும் தர வல்லது என்றிப்படி எண்ணற்ற புதிய புதிய பொருள்கள் கூறப்படுகின்றன.

    இதனால்தான், பதினெண்சித்தர்கள் இந்து வேதத்தை எந்த உலகுக்கும் முதன்முதலிலேயே வழங்குகின்றவர்களாக இருக்கின்றார்கள். அதாவது புதிது புதிதாக தோன்றக் கூடிய எந்த உலகானாலும் சரி, அந்த உலகில் தோன்றிடக் கூடிய பயிரினங்களும், உயிரினங்களும் பண்பட்டு, தூய்மைப்பட்டு, வாய்மைப்பட்டு உய்வடைவதற்காக இந்துவேதத்தை முதன்முதலிலேயே வழங்குகிறார்கள் பதினெண்சித்தர்கள்.

     இந்த இந்து வேதத்தில் உள்ள எழுத்துக்களும், சொற்களும், சொற்றொடர்களும், உரத்த குரலில் ஒதப்பட்டு எழுப்பப் படுகின்ற ஒலி அலைகள்தான் பிண்டத்தை மற்ற பிண்டங்களோடும், அண்டங்களோடும், பேரண்டங்களோடும், அண்ட பேரண்டங்களோடும் இணைத்துப் பிணைக்கிறது.

    இதே போல் இந்த இந்து வேத ஒலி அலைகள்தான் ஒவ்வொரு மனிதனுடைய முற்பிறப்பு, மறுபிறப்பு, இப்பிறப்பு ஆகிய மூன்றையும் இணைத்துப் பிணைத்து, இவற்றின் நல்லவை அல்லவைகளை கூட்டிக் கழித்து நிகழ்கால நடைமுறை வாழ்வுக்குரிய பொருளை விளக்குகின்றன.

    இதே போல் இந்த இந்து வேத ஒலி அலைகள்தான் இறைவன் அல்லது கடவுள் என்பதையும், மனிதனுடைய உயிரையும், மனிதனுடைய சொந்த பந்த பற்றுக்களால் உருவாகும் பாசம் என்பதையும் இணைத்து மனிதனுக்குத் தேவையான அருளுலக வாழ்வுக்குரிய பக்குவங்களை விளைவித்துத் தருகின்றன.

    இதனை விளக்கமாகக் கூறிட வேண்டுமென்றால், இந்து வேதத்தின் எழுத்து, சொல், சொற்றொடர் எனும் மூன்றும் உரத்த குரலில் ஒதப்பட்டு எழுப்பப்படும் ஒலி அலைகளால்தான் மனித வாழ்வுக்குத் தேவையான பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கும் படிப்படியாகக் கிடைக்கின்றன.

    இந்த இந்து வேதத்தின் எழுத்து, சொல், சொற்றொடர் முதலிய மூன்றும் மனிதனுடைய ஆவி, ஆன்மா, ஆருயிர் என்ற மூன்றுக்கும் சமமானவை.

    இந்த இந்து வேதம் எழுத்து, சொல், சொற்றொடர் எனும் வரிவடிவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு விரிந்து பரந்து எங்கும் வெகு வேகமாகச் செல்லக்கூடிய ஒலியாகத்தான் வாழுகிறது.

    எனவே, இந்து வேதத்தை எழுத்துக்களின் வரிவடிவங்களுக்குள்ளோ அல்லது சொற்களின் பொருள் வடிவங்களுக்குள்ளோ அல்லது சொற்றொடர்களின் கருத்து விளக்க எல்லைகளுக்குள்ளோ உள்ளடக்கிக் கண்டிட முயலக்கூடாது, முயலக்கூடாது, முயலக்கூடாது என்று மூலப் பதினெண் சித்தர்களாலும் பதினெட்டாம்படிக் கருப்புகளாலும் மிகமிகத் தெளிவான வரையறுக்கப்பட்ட கருத்து அறிவிக்கப் பட்டிருக்கிறது, அறிவிக்கப் பட்டிருக்கிறது, அறிவிக்கப் பட்டிருக்கிறது.

    இதுவே இந்த வேதத்தின் அளப்பரிய எல்லையற்ற விரிந்து பரந்துபட்ட அரிய பெரிய உயரிய, சீரிய, வீரிய, நேரிய நிலைமைகளை விளக்குகிறது, விளக்குகிறது, விளக்குகிறது,


    தொடர்புடையவை: