• முகப்புப் பக்கம்>
  • அறிமுகவுரை>
  • மதம் பற்றிய விளக்கம்.
  • மதம் பற்றிய விளக்கம்.

    மதம்

    அண்டபேரண்டம் ஆளும் மூலப் பதினெண் சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், பயன்மிக்க செயல் சித்தாந்தம், முறையான மனித வாழ்வு, பத்திப்பாட்டை, சத்திச் சாலை, சித்திச் சோலை, முத்தி மன்றம், தவப்பள்ளி, வேள்விக் கூடம், அருட் கோட்டம், கடவுளைக் காணும் வழி, கடவுளோடு உறவு கொள்ள உதவும் சாதனம், அருளாளர்களின் சாதனை, அகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் நிம்மதியையும், நிறைவையும் தரும் அருமருந்து, மனித வாழ்வுக்கு சமத்துவத்தையும், சமாதானத்தையும், சகோதரத் தத்துவத்தையும் தரும் தத்துவ வித்து, மனித வாழ்வுக்கு பேரின்பத்தைத் தரும் பெரும் விருந்து, அரும் மருந்து என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

    இப்படி மூலப் பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு கணக்கற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுவதிலிருந்து மதம் என்ற சொல் ஒர் ஒப்புயர்வற்ற அரிய பயன் மிக்க சீரிய செந்தமிழ்ச் சொல் என்ற பேருண்மை விளங்குகிறது.

    இந்த பொருளாழம் மிக்க சீரிய செந்தமிழ்ச் சொல்லான மதமென்ற சொல்லை பொருளாழமிக்க அழகிய இனிய செந்தமிழ்ச் சொல்லான இந்து என்ற சொல்லோடு சேர்ந்து இந்து மதம் என்ற ஒரு சொல் உருவாக்கப் பட்டிருக்கிறது.

    அதாவது, மூலப் பதினெண் சித்தர்கள் ஆழச் சிந்தித்தும், நீள நினைத்தும்தான் இந்த இந்துமதம் என்ற சொல்லை உருவாக்கி யிருக்கிறார்கள், உருவாக்கி யிருக்கிறார்கள், உருவாக்கி யிருக்கிறார்கள்.

    அதன் பயனாகத்தான் இந்த இந்துமதம் பிண்டங்கள், அண்டங்கள், பேரண்டங்கள், அண்டபேரண்டங்கள் அனைத்திற்கும் உயிர் மூச்சான இந்து வேதத்தின் செயல் வடிவமாக வாழுகிறது, வாழுகிறது, வாழுகிறது.

    இந்த அரிய கருத்தை இந்தப் பெரிய செய்தியை இந்து வேத மதமான இந்து மதம் என்ற சொற்றொடர் விளக்குகிறது.

    இந்தச் சொற்றொடர் மூலப் பதினெண்சித்தர்கள், பதினெட்டாம்படிக் கருப்புகள், அனைத்து வகைப்பட்ட சித்தர்கள், கடவுள்கள், வழிபடு நிலையினர்கள், ஆச்சாரியார்கள், பதினெண்சித்தர் பீடாதிபதிகள். . முதலியவர்களின் எழுத்துக்களில் கணக்கற்ற முறை இடம் பெற்றிருப்பதன் மூலம் இந்து வேதத்தின் செயல் வடிவம்தான் இந்துமதம் என்பதைத் தெளிவாக அறியலாம், எளிமையாகப் புரியலாம், விளக்கமாக உணரலாம்.

    இத்துடன், இந்துமதம் என்று சொல்லப் படுகின்ற ஒரு மதம் திடீரென்று ஞானமோ, கடவுட் காட்சியோ, தெய்வீகச் சாட்சியோ, அருட்சித்தியோ அடைந்திட்ட ஒரு தனி மனிதனால் தோற்றுவிக்கப் பட்ட ஒன்றல்ல, ஒன்றல்ல, ஒன்றல்லவே அல்ல என்று இம்மண்ணுலகுக்கு இந்த இந்து மதத்தை அரசியல் பூர்வமாக அறிவித்த முதல் பதினெண்சித்தர் மடாதிபதியும், பீடாதிபதியும், ஞானாச்சாரியாருமான ஆதிசிவனாரின் வாசகத்தையும் இங்கு எண்ணிப் பார்த்திடல் வேண்டும், எண்ணிப் பார்த்திடல் வேண்டும், எண்ணிப் பார்த்திடல் வேண்டும்.

    அப்பொழுதுதான், இந்து மதத்தின் அளப்பரிய, எல்லையற்ற விரிந்து பட்ட அரிய பெரிய சீரிய நேரிய வீரிய நிலைமைகளை யெல்லாம் ஒரளவாவது தெரிய முடியும், தெரிய முடியும், தெரிய முடியும், தெரிந்தறிய முடியும், தெரிந்தறிய முடியும், தெரிந்தறிய முடியும், அறிந்து புரிய முடியும், அறிந்து புரிய முடியும், அறிந்து புரிய முடியும், புரிந்து உணர முடியும், புரிந்து உணர முடியும், புரிந்து உணர முடியும்.

    இந்து இந்துமதத்தைப் பற்றி முதல் பதினெண் சித்தர் பீடாதிபதியும் மடாதிபதியுமான ஞானாச்சாரியார் ஆதிசிவனாரும் அவரை அடுத்து பதினெண்சித்தர் மடாதிபதி பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற பதினோரு ஞாலகுரு சித்தர் கருவூறார்களும் வழங்கியுள்ள வாசகங்கள் இந்து மதத்தைப் பற்றிய வரலாறுகளையும், நடைமுறைகளையும், ஒழுகலாறுகளையும், மரபுகளையும், சட்ட திட்டக் கட்டுப்பாடுகளையும் வாழ்வியலுக்குரிய உறவு முறைகளையும் உரிமை நெறிகளையும். தெளிவாக, எளிமையாக, விளக்கமாக நேரடியாக விளக்குகின்றன, விளக்குகின்றன, விளக்குகின்றன.

    மேலும்

    என்றிப்படிப்பட்ட எண்ணற்ற வாசகங்கள் இந்து வேத நூல்களிலும் இந்து மத நூல்களிலும் ஏராளமாகக் கிடைப்பதால் இந்து மதத்தின் அருமை பெருமைகள், அரிய நிலைகள், பெரிய நிலைகள், சீரிய பயன்கள்… முதலியவை தெளிவாகத் தெரிய வருகின்றன,

    ஆனால், இந்த இந்து வேத நூல்களும், இந்துமத நூல்களும் முழுக்க முழுக்க அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியான அருளூறு ஆட்சிமொழியான அருளுறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் இருக்கின்றன.

    எனவேதான், காலப்போக்கில் அன்னிய நாட்டவர்களும், அன்னிய மொழிகள் தமிழோடு சேர்ந்து உருவாக்கிய புதிய புதிய மொழிகளும் இந்து மதத்தில் புகுந்து விட்ட காரணத்தினால் தமிழ் மொழியிலுள்ள இந்து வேதம் பற்றிய கருத்துக்களும், அருளூறு பூசை மொழிகளும், பூசை விதிகளும், இந்து மதம் பற்றிய கருத்துக்களும், இவை பற்றிய செய்திகளும் வரலாறுகளும், இலக்கியங்களும், அருட்கலைகளும், அருளுலகத் தத்துவங்களும், செயல் சித்தாந்தங்களும்… இந்துமத வாழ்வு வாழும் இந்துக்களுக்கே தெரியாமல் போய் விட்டது, தெரியாமல் போய் விட்டது, தெரியாமல் போய் விட்டது, தெரியாமலேயே போய் விட்டது.

    அதன் பிறகே,

    1. ஐந்தீ வேட்டல், எனப்படும் ஒமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி என்ற பூசை நெறி முறைகளும்,
    2. முத்தீ ஓம்பல் எனும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, எனும் பூசை நெறிமுறைகளும்,
    3. தவம், ஞானம், முதலிய பூசை நெறிமுறைகளும்,
    4. கருவறை, வெட்டவெளிக் கருவறை, வழிபாட்டு நிலையக் கருவறை, கோயில் மூலக்கருவறை எனும் நான்கு இடங்களில் நிகழ்த்தப்பட வேண்டிய பூசை நெறிமுறைகளும்,
    5. குரு, குருக்கல், குருமார், பூசாரி எனும் நால்வரின் பூசை நெறிமுறைகளும்,
    6. புதிதாக வைக்கப்படும் சிலைகளுக்குரிய உயிர்ப்பு, ஆற்றல் குன்றிய அல்லது அருள் நலம் நலிந்த சிலைகளுக்குரிய புத்துயிர்ப்பு… முதலியவற்றைச் செய்வதற்குரிய பூசை நெறிமுறைகளும்,
    7. முடிகயிறு, தாயத்து, சக்கரம், இயந்தரம், இயந்திரம், இயந்திறம், எந்தரம், எந்திரம், எந்திறம். . . முதலியவகைளைத் தயாரிப்பதற்குரிய பூசை நெறிமுறைகளும்,
    8. காற்று, கருப்பு, பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், செய்வினை, வைப்பு, கழிப்பு, மருந்து, கண்ணேறு முதலியவற்றைத் தடுத்து அகற்றி நலமளிக்கும் பூசை நெறிமுறைகளும்,
    9. பீடம், மடம், ஆதீனம், தம்பிரான், சன்னிதானம், சந்நதி, ஆச்சாரியார், பண்டாரம் முதலியவர்களுக்கு உரிய பூசை நெறிமுறைகளும்…

    இந்து மதத்தில் இருந்தும் இல்லாதவைகளாகப் போய்விட்டன. இருந்தும் இல்லாதவைகளாகப் போய்விட்டன, இருந்தும் இல்லாதவைகளாகப் போய்விட்டன.

    அதாவது, மேலே குறிப்பிட்ட பூசை நெறிமுறைகள் அனைத்தும் அன்னிய மொழிகளாலும், அன்னியர்களாலும் தெரிந்து கொள்ள முடியாமல் போனமையாலும், புரிந்து கொள்ள முடியாமல் போனமையாலும்தான், காலப் போக்கில் அனைத்தையும் மறுக்கவும் வெறுக்கவும் எதிர்க்கவும், பகைக்கவும், புறக்கணித்து ஒதுக்கவும், இழித்துப் பழித்துக் குறைக்கவும், மறைக்கவும் நேரிட்டு விட்டன, நேரிட்டு விட்டன, நேரிட்டு விட்டன.

    இப்படியெல்லாம் அன்னியரும் அன்னிய மொழியினரும் செயல்பட்டிட்ட காரணத்தினால்தான், பிண்டங்களையும், அண்டங்களையும் பேரண்டங்களையும் அண்டபேரண்டங்களையும் ஆளுகின்ற இந்து வேதம்; தான் வாழும் இந்துமத இந்தியாவிற்குள்ளேயே தேக்கம் பெற்று, முடக்கம் பெற்று, அடக்கம் பெற்று, ஒடுக்கம் பெற்றுச் செயல்நலம் அனைத்தும் குன்றிச் செத்துப் போன நிலையை அடைந்துவிட்டது.

    எனவேதான் இந்துக்கள் இந்துமதத்தின் பூசை நெறிமுறைகளால் தேவைக்கேற்ப அருளை விருந்தாகவும், மருந்தாகவும், அநுபவப் பூர்வமாகப் பெறமுடியாமல் போய்விட்டது. பெற முடியாமல் போய் விட்டது. பெற முடியாமல் போய் விட்டது. பெற முடியாமலேயே போய் விட்டது.

    இவற்றால்தான் இந்துக்கள் வேற்று மதங்களையும், மாற்று மதங்களையும் நாடித் தேடி ஒடினார்கள், ஒடினார்கள், ஒடினார்கள், ஒடிக் கொண்டே யிருக்கிறார்கள், ஒடிக் கொண்டே யிருக்கிறார்கள், ஒடிக் கொண்டே யிருக்கிறார்கள்.

    இப்படிப்பட்ட ஓட்டத்தை தடுத்து நிறுத்திடும் அக்கறையோ, அறிவோ, ஆர்வமோ, ஆற்றலோ, தரமோ, திரமோ, திறமோ, தீரமோ, உரமோ, அறமோ, மறமோ, வீரமோ உடைய இந்துமதத் தலைவர்களும் இல்லை, தொண்டர்களும் இல்லை, பத்தர்களும் இல்லை.


    தொடர்புடையவை: