பத்தி 6

இந்த பொருளாழம் மிக்க சீரிய செந்தமிழ்ச் சொல்லான மதமென்ற சொல்லை பொருளாழமிக்க அழகிய இனிய செந்தமிழ்ச் சொல்லான இந்து என்ற சொல்லோடு சேர்ந்து இந்து மதம் என்ற ஒரு சொல் உருவாக்கப் பட்டிருக்கிறது.

அதாவது, மூலப் பதினெண் சித்தர்கள் ஆழச் சிந்தித்தும், நீள நினைத்தும்தான் இந்த இந்துமதம் என்ற சொல்லை உருவாக்கி யிருக்கிறார்கள், உருவாக்கி யிருக்கிறார்கள், உருவாக்கி யிருக்கிறார்கள்.

அதன் பயனாகத்தான் இந்த இந்துமதம் பிண்டங்கள், அண்டங்கள், பேரண்டங்கள், அண்டபேரண்டங்கள் அனைத்திற்கும் உயிர் மூச்சான இந்து வேதத்தின் செயல் வடிவமாக வாழுகிறது, வாழுகிறது, வாழுகிறது.

இந்த அரிய கருத்தை இந்தப் பெரிய செய்தியை இந்து வேத மதமான இந்து மதம் என்ற சொற்றொடர் விளக்குகிறது.

இந்தச் சொற்றொடர் மூலப் பதினெண்சித்தர்கள், பதினெட்டாம்படிக் கருப்புகள், அனைத்து வகைப்பட்ட சித்தர்கள், கடவுள்கள், வழிபடு நிலையினர்கள், ஆச்சாரியார்கள், பதினெண்சித்தர் பீடாதிபதிகள். . முதலியவர்களின் எழுத்துக்களில் கணக்கற்ற முறை இடம் பெற்றிருப்பதன் மூலம் இந்து வேதத்தின் செயல் வடிவம்தான் இந்துமதம் என்பதைத் தெளிவாக அறியலாம், எளிமையாகப் புரியலாம், விளக்கமாக உணரலாம்.

இத்துடன், இந்துமதம் என்று சொல்லப் படுகின்ற ஒரு மதம் திடீரென்று ஞானமோ, கடவுட் காட்சியோ, தெய்வீகச் சாட்சியோ, அருட்சித்தியோ அடைந்திட்ட ஒரு தனி மனிதனால் தோற்றுவிக்கப் பட்ட ஒன்றல்ல, ஒன்றல்ல, ஒன்றல்லவே அல்ல என்று இம்மண்ணுலகுக்கு இந்த இந்து மதத்தை அரசியல் பூர்வமாக அறிவித்த முதல் பதினெண்சித்தர் மடாதிபதியும், பீடாதிபதியும், ஞானாச்சாரியாருமான ஆதிசிவனாரின் வாசகத்தையும் இங்கு எண்ணிப் பார்த்திடல் வேண்டும், எண்ணிப் பார்த்திடல் வேண்டும், எண்ணிப் பார்த்திடல் வேண்டும்.

அப்பொழுதுதான், இந்து மதத்தின் அளப்பரிய, எல்லையற்ற விரிந்து பட்ட அரிய பெரிய சீரிய நேரிய வீரிய நிலைமைகளை யெல்லாம் ஒரளவாவது தெரிய முடியும், தெரிய முடியும், தெரிய முடியும், தெரிந்தறிய முடியும், தெரிந்தறிய முடியும், தெரிந்தறிய முடியும், அறிந்து புரிய முடியும், அறிந்து புரிய முடியும், அறிந்து புரிய முடியும், புரிந்து உணர முடியும், புரிந்து உணர முடியும், புரிந்து உணர முடியும்.