பத்தி 5

மதம்: -

அண்டபேரண்டம் ஆளும் மூலப் பதினெண் சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், பயன்மிக்க செயல் சித்தாந்தம், முறையான மனித வாழ்வு, பத்திப்பாட்டை, சத்திச் சாலை, சித்திச் சோலை, முத்தி மன்றம், தவப்பள்ளி, வேள்விக் கூடம், அருட் கோட்டம், கடவுளைக் காணும் வழி, கடவுளோடு உறவு கொள்ள உதவும் சாதனம், அருளாளர்களின் சாதனை, அகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் நிம்மதியையும், நிறைவையும் தரும் அருமருந்து, மனித வாழ்வுக்கு சமத்துவத்தையும், சமாதானத்தையும், சகோதரத் தத்துவத்தையும் தரும் தத்துவ வித்து, மனித வாழ்வுக்கு பேரின்பத்தைத் தரும் பெரும் விருந்து, அரும் மருந்து என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

இப்படி மூலப் பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு கணக்கற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுவதிலிருந்து மதம் என்ற சொல் ஒர் ஒப்புயர்வற்ற அரிய பயன் மிக்க சீரிய செந்தமிழ்ச் சொல் என்ற பேருண்மை விளங்குகிறது.