07:19:28

இருக்குவேதம் காண்டம்-7, மண்டலம்-19, நாள் உரைக்கோவை வாசகம் 28
“இவ்வையகத்தில் பல்வேறு வகையான தட்பவெப்ப சூழ்நிலைகள் மலைமுகடு முதல் அலைகடலிடைத் தீவுகள் வரை வேறுபட்டிருக்கின்றன. இவற்றிற்கேற்பவே மெய்யைப் போர்த்துவது, தலைப்பாகை அணிவது, பாதுகை அணிவது அமைதல் வேண்டும். தேவையில்லாமல் மெய்யை ஆடைகளால் போர்த்துவதும், தலைப்பாகை அணிவதும், பாதுகை அணிவதும், நோய்நிலைகளை, தேய்நிலைகளை, ஓய்நிலைகளை, மாய்நிலைகளை.... விரைந்து அதிகப்படுத்திடும். அதனால், உடம்பில் அதிகமான ஆடை அணியாமல் இருப்பதே உடம்புக்கும், உள்ளத்திற்கும், சிந்தைக்கும், உணர்வுக்கும், செயல்நிலைகளுக்கும் நலத்தையும், வளத்தையும், வலிவையும், பொலிவையும், சுறுசுறுப்பையும் வழங்கிடும்”.