02:08:39

இருக்கு வேதம்: காண்டம்-2, மண்டலம்-8, நாள் உரைக்கோவை வாசகம்-39

“மத வேறுபாடின்றி, மொழி வேறுபாடின்றி, இன வேறுபாடின்றி, நாட்டு வேறுபாடின்றி எல்லா மனிதர்களும், தங்களுடைய ‘மறுபிறப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும்’; ‘முற்பிறப்பை அறிந்து கொள்ள வேண்டும்’; ‘இப்பிறப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்’; அப்பொழுதுதான் மனித வாழ்க்கையின் பயனைப் பதட்டமின்றி, அவசரமின்றி, மயக்க தயக்கமின்றி, அச்ச கூச்ச மாச்சரியமின்றி ... நிதானத்தோடும், அமைதியோடும், மகிழ்ச்சியோடும் துய்த்து மகிழ முடியும். அதற்காகத்தான், அண்டபேரண்டங்களை ஆளும், இந்துவேதமான இருக்கு வேதத்தில் அன்றாடப் பூசைமொழி ஆதிசிவனாரால் அருளூறு அமுதத் தெய்வீக செம்மொழியான முத்தமிழ் மொழியில் சிறப்பாக வழங்கப் பட்டிருக்கிறது.