பத்தி 3

இந்த இந்து வேதம் அண்ட பேரண்டங்களை ஆளுகின்ற மூலப் பதினெண் சித்தர்கள், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புகள், 48 வகைப்பட்ட கடவுள்கள், 48 வகை வழிபடு நிலையினர்கள், 48 வகைச் சித்தர்கள் முதலியவர்களால் காலங்கள் தோறும் ஏற்படக் கூடிய புதிய புதிய தேவைகளுக்கேற்பத் தேவையான மாற்றங்களை யெல்லாம் செய்யப் பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகின்ற ஒன்றாகும். எனவேதான், அண்டங்கள் பேரண்டங்கள், அண்டபேரண்டங்கள் என்பனவற்றிலுள்ள எல்லா வகைப்பட்ட உலங்களிலும், இந்த இந்து வேத மதமான இந்து மதம் ஒன்றே நிலையாக இருந்து வருகின்றது. ஆனால் அவ்வப்பொழுது அந்தந்த உலகங்களின் சூழ்நிலை மாற்றங்களுக்கேற்ப துணை மதங்கள் சில இந்த இந்து வேத மதமான இந்து மதமெனும் ஆலமரத்தின் புதிய புதிய இலைகளாகவும் கிளைகளாகவும் விழுதுகளாகவும் தோன்றுவதுண்டு, ஆனால் மிகவிரைவில் அவைகளனைத்தும், தாங்கள் இந்து மதத்தின் ஒர் அங்கம்தான் என்பதை உணர்ந்து இந்துமதத்தோடு ஐக்கியமாகி விடுகின்றன. அதாவது இந்துவேத மதமான இந்துமதம் தவிர வேறு எந்த ஒரு புதிய மதம் தோன்றினாலும், அது குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் தனிப்பட்ட ஒரு மதமாகத் தனித்து இயங்காமல் இந்துவேத மதமான இந்து மதத்தோடேயே இணைந்து விடும் என்பதுதான் அருளுலக வரலாறு.