48:02:05

அதர்வானவேதம் காண்டம்-48, மண்டலம்-2, நாள்வாக்கியம்-5:

“இந்துவேதம், இருக்குவேதத்தில் வெளிப்படையாக வழங்கிடாமல் வழங்கிய அதர்வான வேத வாக்கியங்களின் எழுத்துக்களும், சக்கரங்களும் அத்தர, அத்திர, அத்திற ஓச்சுக்களும், அருவ அருவுருவ உருவருவ உருவ சித்திகளும் முறையாகவும், நிறைவாகவும் யுகயுகமாக மானுட மேம்பாட்டிற்கு பயன்பட வேண்டுமென்பதற்காகவே அதர்வான வேதம் வகுக்கப்பட்டது. ஆனால், இதன் அரிய பெரிய சாதனைகளால் கூட இவ்வுலக மூலவேதமாக, முதல்வேதமாக, மானுட இனங்களின் பொதுவேதமாக, காலங்கள் தோறும் கடவுளர்களாலேயே தேவைக்கேற்ப சுருக்கி எழுதித் தரப்பட்டும், விரிவாக செயலாக்கப்பட்டும், அருளப்படும் இந்துவேதத்தை மறந்தும், துறந்தும், மறுத்தும், வெறுத்தும், புறக்கணித்தும், புறப்படுகின்ற புதுவேதங்களாலும், நான்காவது விஞ்ஞானத்தின் சாதனைகள் மிகுந்திடும். அப்பொழுது மானுடர் அனைத்து அகப்பண்பாடுகளையும், புற நாகரீகங்களையும், அறிவியல் சாதனைகளையும் அழித்தொழிக்கும் வெறிநிறைந்த அசுர வாழ்க்கை மேற்கொள்வார்கள். அதற்கும் இந்துவேத நாயகங்களான அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்களே முடிவையும், விடிவையும் நல்கிட; இந்துவேதத்தையும், இந்துமத வாழ்வியலையும் மறுமலர்ச்சியும், வளவளர்ச்சியும், ஆட்சிமீட்சியும் அடையச் செய்திடுவர்.”