Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 22

பத்தி 22

இப்படி

  • இந்து வேதம் தோன்றிய இடம் கடலுள் மறைந்த இளமுறியாக் கண்டம் என்பதும்;
  • இந்த இந்து வேதம் தோன்றி இன்றைக்கு 1991ம் ஆண்டு என்ற கணக்குப்படி 4373092 ஆண்டுகளுக்கு முன்னால் இம்மண்ணுலகில் தோற்றுவிக்கப் பட்டது என்பதும்;
  • இந்த இந்து வேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கியவர்கள் அண்டபேரண்டமாளும் பதினெண் சிததர்களும் பதினெட்டாம்படிக் கருப்புகளும் ஆவார்கள் என்பதும்;
  • இந்த இந்து வேதம் நான்கு யுகங்களாக வாழ்ந்து வருகிறது என்பதும்;
  • இந்த இந்து வேதத்தில் தான் எண்ணியல் அறிவு, கணக்கியல் அறிவு, எழுத்தியல் அறிவு, இலக்கிய இயல்அறிவு, விண்ணியல் அறிவு, விண்ணியல் இயக்க அறிவு, மண்ணியல் அறிவு, மண்ணியல் இயக்க அறிவு முதலிய கணக்கற்ற அறிவுகள் வளர்க்கப்பட்டுள்ளன என்பதும;

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் படைப்புகளில் மிகத் தெளிவாக அறிவிக்கப் படுகின்றன.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே